உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவிண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

செவிண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஆர்.கே.பேட்டை: செவிண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார், செவிண்டியம்மன் கோவில், ஆறு மாதங்களாக புதுப்பிக்கப்பட்டு வந்தது. பணிகள் நிறைவடைந்ததையடுத்து, நேற்று காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. தொடர்ந்து, பிரவேச பலி, சாந்தி பூஜை உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முன் மண்டபத்தில் இருந்த அம்மன் சிலைக்கும், மூலவர் அம்மனுக்கும் அபிஷேகம் நடந்தது. மதியம் கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் வைத்தனர். இரவு 7:00 மணியளவில், வாண வேடிக்கையுடன் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேகத்தில், வங்கனுார், சிங்க சமுத்திரம், ஆர்.கே.பேட்டை, எஸ்.பி.கண்டிகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !