தஞ்சை பெரிய கோவில் வராஹி அம்மனுக்கு பூச்செரிதல் விழா கோலாகலம்!
தஞ்சை: பெரிய கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு பூச்செரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உற்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலில் வராஹி அம்மனுக்கென்றே தனி சன்னிதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆசாட நவராத்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. அன்று முதல் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், மாதுளை, நவதானியம், என பல்வேறு பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் நிறைவு நாளான திங்கட்கிழமை அன்று இரவு அம்மனுக்கு பூச்செரிதல் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதி வழியாக திருவீதி உலா நடந்தது. செண்டைமேளம், கரகாட்டம், நாதஸ்வரம் என பல்வேறு வாத்தியங்கள் முழங்க நடந்த வீதி உலாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கோலாகலமாக நடந்த வராஹி அம்மன் புஷ்ப அலங்கார விழாவின் போது பாதுகாப்பு எற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.