உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயராகவ பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா!

விஜயராகவ பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா!

திருத்தணி: விஜயராகவ பெருமாள் கோவிலில், நேற்று, கருட வாகனத்தில் உற்சவ பெருமான் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரு த்தணி, நந்தி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது கோட்ட ஆறுமுக சுவாமி கோவில். இக்கோவில் வளாகத்தில், விஜயராகவ பெருமாள் கோவில்  உள்ளது. இக்கோவிலில், நேற்று, திருத்தணி மளிகை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கருடசேவை விழா நடந்தது. விழாவை ஓட்டி அதிகாலை,  5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, கருட வாகனத்தில்  உற்சவர் விஜயராகவ பெருமாள் எழுந்தருளி, திருத்தணி நகர முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 5:00  மணிக்கு ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், உற்சவர் விஜயராகவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந் தன. தொடர்ந்து பெருமாள், மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தை அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !