உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 77 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம்!

77 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம்!

துாத்துக்குடி:துாத்துக்குடி- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரத்தில் வாழையானந்தா முத்துச்சுவாமி அடிகள் நிறுவிய ராஜ ராஜேஸ்வரி பீடம் உள்ளது. அங்கு, 77 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பீடத்தில் ஸ்ரீ ராமகோடி ஆஞ்சநேயர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு ’விஸ்வரூப சுந்தர வரத ஆஞ்சநேயர்’, என பெயர் சூட்டப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று (ஜூலை 9) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. உலகில் அமைதி வேண்டி நடந்தஇந்த கும்பாபிஷேகத்தில் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !