சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் சொக்கநாதருக்கு அபிஷேகம்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இரண்டாம் நாளாக சொக்கநாதர் பெருமானுக்கு மகா அபிஷேகம் தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் செய்தார். நாகை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் மடம் சார்பில் பன்னிரு திருமுறை உரை நுõல் வெளியீட்டு அரங்கேற்ற விழா சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு, சொக்கநாதர் பெருமானோடு தங்கியுள்ளார். அதனால், தருமபுரம் ஆதீனம் மடத்தில் செய்யப்பட வேண்டிய பூஜைகள், ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த இரு நாட்களாக குருமகா சந்நிதனாம், சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை செய்தார். இதில் திருவாடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார், திருப்பனந்தாள் காசி மடம் அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் மவுன மடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்ட பல ஆதீனகர்த்தாக்கள், ஆன்மீகவாதிகள், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.