உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோனியம்மன் கோவிலில் இன்று கோபுர கலசங்கள் பிரதிஷ்டை!

கோனியம்மன் கோவிலில் இன்று கோபுர கலசங்கள் பிரதிஷ்டை!

கோவை : கோனியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி இன்று மங்கல இசையுடன் ராஜகோபுரத்தில் கோபுரகலசங்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. கோனியம்மன் கோவில் ராஜகோபுரத்திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், திருக்குட நன்னீராட்டு விழா ஜூலை 11 அன்று நடக்கிறது. குடமுழுக்கு விழாவின் முதல் நிகழ்ச்சி கடந்த 3ல் மங்கல இசையுடன் விழா துவங்கியது. ஜூலை 4ல் புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்தில் வைக்கப்பட உள்ள தங்கக்கலசங்களை புனிதமாக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ராஜகோபுரக்கலசங்களை கோவை நகர வீதிகளில் வீதி உலா வந்தது. இன்று ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் ஒன்பது கோபுரக்கலசங்களையும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. நாளை ஜூலை 10ம் தேதி, காலை 7.00 மணிக்கு மங்கல இசையும், 8.00 மணிக்கு திருமுறை பண்ணிசையும், இரண்டாம் காலவேள்வியும், இரவு 7.00 மணிக்கு மூன்றாம் காலவேள்வியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !