ரமலான் சிந்தனைகள்: அம்மாவை கனிவுடன் பாருங்கள்!
இஸ்லாமின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகத் திகழ்வது ஹஜ் பயணம். ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது, மெக்காவுக்கு புனிதப்பயணம் சென்று வந்துவிட்டால், அளப்பரிய நன்மை களைப் பெறலாம். ஒருவேளை, அங்கு சென்று வருமளவுக்கு அல்லாஹ் செல்வச்செழிப்பைத் தரவில்லை என்றால், ஹஜ் பயணத்தின் நன்மையை அடைய வழி என்ன?இந்தக் கேள்வியை நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் கேட்டார்."தோழரே! அதிகாலை வேளையில், மக்கள் எல்லாம் எழுவதற்கு முன், ஸுப்ஹு (அதிகாலை) தொழுகையை முடித்து விட்டு, உங்கள் தாயாரைக் கனிவோடு சென்று பாருங்கள். அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜின் நன்மை கிடைக்கும்,” என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம்.பெற்றவர்களை இப்போது முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் காலமாக இருக்கிறது. பெற்று வளர்த்த பிள்ளைகள், வீட்டுக்கு வந்த மருமகள்களின் தொல்லை காரணமாகவே, பெரும்பாலானவர்கள் இந்த முடிவை எடுக்கிறார்கள். இவ்வாறு, பெற்றோருக்கு துன்பம் இழைக்கும் பிள்ளைகள் இந்தச் செய்தியை சிந்தனையாகக் கொள்ள வேண்டும். தாயை வெளியே அனுப்பிவிட்டு, நீங்கள் யாரைக் கனிவோடு பார்க்க முடியும்? சிந்திப்பீர்களா!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50.
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23.