உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவில் கிருத்திகை திருவிழா ஆலோசனை கூட்டம்!

திருத்தணி முருகன் கோவில் கிருத்திகை திருவிழா ஆலோசனை கூட்டம்!

திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை திருவிழா, வரும் 19ம் தேதி முதல், 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர் தொட்டிகள் அமைத்து, பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் நவீன நடமாடும் கழிப்பறைகள் அமைக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் நோக்கில், துணிப்பைகளை பயன்படுத்த நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், பக்தர்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், முடி காணிக்கை செலுத்துமிடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் உள்ளிட்ட 18 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !