குரு நகர் பெருமாள் கோவிலில் திருநட்சத்திர அவதார தின விழா!
ADDED :4119 days ago
நெட்டப்பாக்கம் : மடுகரை, குரு நகர், லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாருக்கு திருநட்சத்திர அவதார தின விழா நடந்தது. இதையொட்டி பெருமான், பெரிய திருவடி, சிறிய திருவடி ஆகிய மும்மூர்த்திகளுக்கு தைலக்காப்பிட்டு திருமஞ்சனம் நடந்தது.மாலை 3.00 மணிக்கு சுதர்சன ஹோமம் நடந்தது. உற்சவ மூர்திகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள்பொடி, சந்தனம், பஞ்சாமிர்தம் கொண்டு திருமஞ்சனம் நடந்தது.பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.