உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாட்ராயசாமி நாச்சிமுத்து அய்யன் கோவிலில் கும்பாபிஷேகம்!

நாட்ராயசாமி நாச்சிமுத்து அய்யன் கோவிலில் கும்பாபிஷேகம்!

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மாந்தபுரம் நாட்ராயசாமி நாச்சிமுத்து அய்யன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பில், இக்கோவிலில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. கோவில் வளாகம், அனைத்து சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை, ஆறாவது யாகசாலை பூஜையும், கடம் புறப்பாடும் நடந்தது. காலை, 7 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஒரே நேரத்தில், அனைத்து கோபுர கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், மூலவர் நாட்ராயசாமி நாச்சிமுத்து அய்யன் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.பக்தர்கள் மீது, கும்பாபிஷேக புனித நீர் படும்படியாக, 30 இடங்களில் ஸ்பிரிங்லர் மூலம், புனித நீர் தெளிக்கப்பட்டது. காலை முதல், பக்தர்களுக்கு "பபே முறையிலும், இலையில் வைத்தும் அன்னதானம் வழங்கப்பட்டது. மிக அதிக அளவில் கூட்டம் இருந்ததால், மாந்தபுரத்துக்கு வெகு தொலைவில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏராளமான போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !