திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் உற்சவருக்கு திருமஞ்சன அபிஷேகம்!
ADDED :4204 days ago
கீழக்கரை : திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் உற்சவருக்கு கடந்த ஆண்டு அணிவிக்கப்பட்ட கவச படி கலைத்து, நவ கலசத்துடன் உற்சவர் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. இரவில் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், ஆலய பேஷ்கார் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.