இருக்கன்குடி உண்டியல் காணிக்கையாக ரூ. 17 லட்சம் வசூல்!
ADDED :4130 days ago
சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக, ரூ.17லட்சத்து 80 ஆயிரத்து 470 வசூலானது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, செயல்அலுவலர் தனபாலன், விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாபிரியதர்ஷினி முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன. இருக்கன்குடி மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள், மாரியம்மன் பக்தர்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் கணக்கிடும் பணியில் ஈடுப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக, ரூ.17லட்சத்து 80ஆயிரத்து 470, 114 கிராம் தங்கம் ,56 கிராம் வெள்ளி கிடைத்தது.