வத்திராயிருப்பு கோயில்களில் கும்பாபிஷேகம்
 வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு நாடார் உறவின் முறையினருக்கு பாத்தியப்பட்ட காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை மண்டபத்தில் கணபதி ஹோமத்துடன் துவங்கி 4 கால யாகபூஜைகள் நடந்த நிலையில் ,யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீரை சிவச்சார்யார்கள் கோயிலை சுற்றி வந்து ,இரு கோயில்களின் கோபுர கலசங்களுக்கும் அபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து காளியம்மன் சர்வ அலங்காரத்திலும், மாரியம்மன் சந்தனக்காப்பு, மஞ்சள் அலங்காரத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சேதுசுந்தரப்பட்டர் தலைமையில் சிவாச்சார்யார்கள் பூஜைகளை செய்தனர். 
*சத்திரப்பட்டி :சதிரப்பட்டி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு ஹோமம் நடந்தது. திருஞான சம்மந்தம் குருக்கள் ஏற்பாடுகளை செய்தார். ஆறுமுகா குரூப் அதிபர் ஆறுமுகம், நாச்சியார் குரூப் சேர்மன் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு, அன்னதானமும் நடந்தது.