வடமதுரை கோயில் திருவிழா
                              ADDED :4130 days ago 
                            
                          
                          வடமதுரை : பாடியூர் ஊராட்சி பி.புதுப்பட்டி காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. வாணவேடிக்கையுடன் அம்மன் அழைப்புடன் துவங்கிய விழாவில், அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல்,மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் கங்கை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. பி.புதுப்பட்டி கிராம மக்கள் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.