உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்மேல் மாதா ஆலய பெருவிழா 16ல் தொடக்கம்!

கார்மேல் மாதா ஆலய பெருவிழா 16ல் தொடக்கம்!

கோவளம் : கோவளம் கார்மேல் மாதா ஆலய, 206-ம் ஆண்டு பெருவிழா, வரும் 16ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவளத்தில், புகழ்பெற்ற ஆலயமாக கார்மேல் மாதா ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் பெருவிழா நடைபெறும்.இந்தாண்டு 206-ம் ஆண்டு விழா, வரும் 16ம் தேதி மாலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17ம் தேதி அன்பின் குடும்ப திருவிழா திருப்பலியும், 18ம் தேதி ஆடம்பர திருப்பலியும் நடைபெறுகிறது.பிரதான விழாவான தேர்த்திருவிழா, 19ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. 20ம் தேதி கொடியிறக்கத்துடன் ஐந்து நாள் பெருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !