உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி திருஆவினன்குடி கோயிலில் அருணகிரிநாதர் விழா!

பழநி திருஆவினன்குடி கோயிலில் அருணகிரிநாதர் விழா!

பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில், அருணகிரிநாதர் அவதார விழா நடந்தது.திருப்புகழ் இயற்றிய அருணகிரிநாதர் ஆனி, மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்நாளைமுன்னிட்டு, பழநி திருஆவினன்குடிகோயிலில் வடமேற்குபகுதியில் உள்ள அருணகிரிநாதருக்கு, சிறப்புஅபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. பழநிகோயில் நாதஸ்வரக்கல்லூரி மாணவர்களின் இன்னிசையும், பழநி திருப்புகழ் அன்பவர்கள் சார்பில், இன்னிசை வழிபாடும் நடந்தது. ஏற்பாடுகளை பழநிகோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !