வள்ளி இல்லாத முருகஸ்தலம்!
ADDED :5305 days ago
முருகன் சன்னதியில் வள்ளியும், தெய்வானையும் சேர்ந்திருப்பதைத் தான் எல்லா தலங்களிலும் காண முடியும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டுமே முருகன் காட்சி தருகிறார். இந்திரன் மகளான இவளை இத்தலத்தில் முருகன் மணந்தார். இந்திரன் இயற்கையின் அதிபதி. குறிப்பாக மேகங்களின் தலைவன். அவனது மகளை இத்தலத்தில் வணங்கினால் மழை பொழியும் என்பது ஐதீகம்.