உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி பாபா கோவிலில் 1008 கலசாபிஷேக விழா!

ஷீரடி பாபா கோவிலில் 1008 கலசாபிஷேக விழா!

குன்னூர் : குன்னூர் அருகே சித்தகிரியில் உள்ள ஷீரடி பாபா கோவிலில் 1008 கலசாபிஷேக விழா நடந்தது. குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில் சித்தகிரியில், தட்சிண பாரத பகவான் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில், 500 கிராமங்களுக்கு ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு, அதிருத்ர மகா யக்ஞத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.பிரபஞ்ச வாழ்வாதாரங்களின் நன்மைக்காக நடந்த அதிருத்ர மகா யாகம் கடந்த 4ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இதில், கர்நாடக மாநிலம் கோகர்ணாவை சேர்ந்த 121 விற்பன்னர்கள் பங்கேற்றனர். அவர்கள்,"ருத்ரம், சமக்ஞம் பாராயணம் செய்து, 64 சடங்குகள் மேற்கொண்டனர்; மகா யாக குண்டம் எழுப்பப்பட்டு, அதி தேவதைகளுக்கு 14 ஆயிரத்து 641 சமக்கமும், 1331 நமக்க பாராயணம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த 1008 கலசாபிஷேக நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ரமண ஆஸ்ரம தலைவர் மவுனதுறவி சத்யானந்த மகாராஜ் தலைமை வகித்தார். சத்ய சாய்பாபா குழுவினரின் பஜனை நடந்தது. ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் சக்திமயி மாதா, செயலர் நந்துபாபா மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !