உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சாமிர்தத்தில் சேர்க்கும் பொருட்கள்

பஞ்சாமிர்தத்தில் சேர்க்கும் பொருட்கள்

முருகப்பெருமானின் திருத்தலங்களில் பழநிக்கு தனிச்சிறப்பு உண்டு. முருகன் ஞானப்பழம் வேண்டி கயிலையிலிருந்து எனக்கென்று தனிநாடு, மக்கள் இருக்கிறார்கள் என்று புறப்பட்டு இப்பழநிமலையில் வந்து நின்றார். அவ்வையார், உனக்கு ஞானப்பழம் தேவையா? நீயே ஞானபண்டிதனாக இருக்கிறாய்; ஞானப்பழமாக திகழ்கிறாய் என்று பழம் நீ என்று மாறி விட்டது. இத்தலம் செவ்வாய்க்குரிய சிறப்புத் தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தின் பெயரைச் சொன்னதுமே, பஞ்சாமிர்தம் நம் நினைவில் வந்து நிற்கும். மலைப்பழம், பேரீச்சம்பழம், நெய், சர்க்கரை, தேன் ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படும் பஞ்சாமிர்தத்தால் இப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு. அமிர்தம் இறப்பற்ற வரத்தைத் தரும்.பஞ்சாமிர்தம் தீர்க்காயுளைத் தரும். இங்கு ஆண்டிக்கோலத்தில் முருகப்பெருமான் தண்டாயுதம் ஏந்தி காட்சி தருவதால் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படுகிறார். பழநியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் என இருவேறுபட்ட கோலங்களில் ஆண்டியாகவும் , அரசனாகவும் முருகன் காட்சியளிக் கிறார். இங்கு முடி காணிக்கை செலுத்தி வழிபாடு செய்வது சிறப்பாகும். அறுபடை வீடுகளில் மூன்றாவது தலமாக அமைந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !