சாஸ்தா கோயிலில் ஏன் யானை வாகனம்?
ADDED :5305 days ago
தன்னை அவமதிப்பவர்களுக்கும் இறைவன் அருள்புரிவார். இதற்கு எடுத்துக்காட்டாக, சூரபத்மனின் தம்பியான தாரகாசூரன் விந்திய மலைப்பகுதியை ஆண்டபோது அவனை முருகன் வதம் செய்தார். பின் அவனை யானையாக்கி தன் தம்பி சாஸ்தாவுக்கு வாகனமாக்கினார். சாஸ்தாவின் மற்றொரு அவதாரமான ஐயப்பன் கோயில்களில் இப்போதும் ஐயப்பன் யானை மீது பவனி வருவது குறிப்பிடத்தக்கது. சாஸ்தா கோயில்களிலும் யானை வாகனம் சன்னதி முன்பு இருக்கும்.