உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா, ஜூலை 22 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 20 காலை தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் மாலை சேனை முதல்வர் புறப்பாடும், ஜூலை 22 காலை 7:00 க்கு கொடியேற்றமும் நடக்கிறது. இதில், கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி 4 மாட வீதிகளிலும் சுற்றி வரப்பட்டு, தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும். விழாவின் 5 ம் நாளான ஜூலை 26 காலையில் மங்களாசாசனமும், இரவு 10:00 க்கு, ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கடமுடையார், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருடன், அன்ன வாகனங்களில் வீதியுலாவும் நடக்கிறது. 7 ம் நாளான ஜூலை 28 இரவு கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயன நிலையில் காட்சி தருதல் நடக்கிறது. விழாவின் 9 ம் நாளான ஜூலை 30 காலை 9:05 க்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா , ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !