மேற்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி
ADDED :5304 days ago
தெட்சிணாமூர்த்தி, சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி இருப்பார். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோயில்) சித்தநாதேஸ்வரர் கோயிலில் இவரை மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் மூலவர் சித்தநாதேஸ்வரரும், மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. இந்த தெட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் தெட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னதியிலுள்ள குரு பகவானுக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.