உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் 28ம் தேதிவருண ஜெப விழா

ஸ்ரீரங்கத்தில் 28ம் தேதிவருண ஜெப விழா

திருச்சி: தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் மழை பெய்ய வேண்டி, ஸ்ரீரங்கத்தில் வரும், 28ம் தேதி, வருணஜெப விழா நடக்கிறது.ஸ்ரீரங்கம் விஸ்வ ஹிந்து பரிசத் அலுவலக இடத்தில், வரும், 28 ம் தேதி காலை, 7 மணியில் இருந்து, 12.30 மணி வரை, கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், வருண, ருத்ர ஜபம், கோ-பூஜை நடக்கிறது. தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பிறகு, பிரசாதம் வழங்கப்படுகிறது.யாகம் மற்றும் வருணஜெப விழாவை, மகேஸ்வர சாஸ்திரிகள், சுந்தர் முன்னின்று, சாஸ்திரிகள் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை, திருச்சி மாவட்ட பாரதீய கிசான் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !