சமயபுரத்தாள் முத்துமாரியம்மன் கோயில் ஆடி விழா!
ADDED :4148 days ago
திருப்புத்தூர் : திருப்புத்தூர், தென்மாப்பட்டு சமயபுரத்தாள் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்தது. காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல் அன்னதானமும், ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. மாலை பெண்கள் பூத்தட்டு எடுத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, கூழ் ஊத்தும் வைபவம் நடந்தது.