பச்சநாச்சியம்மன் கோவில் ஆக., 7ல் தேர்த்திருவிழா
ADDED :4095 days ago
லாலாப்பேட்டை: லாலப்பேட்டை அடுத்துள்ள கள்ளப்பள்ளியில், பிரசித்தி பெற்ற பச்சநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் திருவிழா வரும், 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. ஆகஸ்ட், 5ம் தேதிசிறிய தேரில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 6ம் தேதி சிறிய தேர் மற்றும் எல்லை காவல் வாங்கும் நிகழ்ச்சியும், 7ம் தேதி பெரிய தேரில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரும், 10ம் தேதி மஞ்சள் நீராடி ஸ்வாமி குடி புகுதல் நிகழ்ச்சியும், வாண வேடிக்கையும் நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.