உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவிலில் உழவாரப் பணி

சிவன் கோவிலில் உழவாரப் பணி

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் சுந்தரர் குருபூஜையை முன்னிட்டு உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் வரும் 3ம் தேதி சுந்தரருக்கு குருபூஜை விழா நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இதையடுத்து திருத்துறையூர், திருமுனைப்பாடிநாடு உழவார திருப்பணிக்கூட்டம் சார்பில் கோவிலைச் சுற்றியுள்ள புதர்கள் மற்றும் செடிகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அமைப்பின் தலைவர் ஜெயராமன்சுவாமிகள் தலைமையிலான 70 பேர் நேற்று காலை 7:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். இத்துடன் கோவில் வளாகத்தை தூய்மைப் படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !