உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முளைக்கொட்டுத் திருவிழா!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முளைக்கொட்டுத் திருவிழா!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் நடக்கும் விழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் நடக்கும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், புரட்டாசி நவராத்திரி கலைவிழா, மார்கழி எண்ணெய்க்காப்பு திருவிழா குறிப்பிடத்தக்கவை. முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு கொடிமரத்தில் நேற்று கொடியேற்றப்பட்டது. மீனாட்சி அம்மன் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, ஆடிவீதிகளில் வலம் வருவார். விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !