அய்யனார் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு!
ADDED :4160 days ago
தியாகதுருகம் : வடதொரசலூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் கிராமத்தில் உள்ள செல்வமுத்து மாரியம்மன், அய்யனார் கோவில் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சக்தி கரகம் அலங்கரித்து திருவீதியுலா நடந்தது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாடல் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. நேற்று அய்யனார் கோவிலில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து, மாவிளக்கு தீபமேற்றி வழிபாடு நடத்தினர். குள்ளக்கருப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வரும் 1 தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.