அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் உற்சவம் !
ADDED :4087 days ago
சோழவந்தான் : சோழவந்தான் பகுதி அம்மன் கோயில்களில் ஆடிப்பூர உற்சவத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் எழுந்தருளிய ஆண்டாள் சன்னதியில் ரகுராமபட்டர் தலைமையில் சடங்குகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஆண்டாள் அன்னவாகனத்தில் ரத வீதிகளில் பவனி வந்தார். அன்னதானம் நடந்தது. கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர் பூபதி ஏற்பாடுகளை செய்தனர்.ஜெனகை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பூமேட்டுத்தெரு உச்சிமாகாளியம்மன், தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன், முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோயில்களில் ஆடிப்பூர உற்சவம் நடந்தன.