உத்தரமேரூரில் துர்க்கையம்மன் ஆலய பால் குட அபிஷேகம்!
ADDED :4198 days ago
உத்தரமேரூரில் துர்க்கையம்மன் ஆலயத்தின் 24-ஆவது ஆண்டு ஆடிப்பூர உற்சவம் புதன்கிழமை நடந்தது.உத்தரமேரூர் முத்து பிள்ளையார் கோயிலில் இருந்து 508 பால்குடங்களுடன் பக்தர்கள் பஜார் வீதி வழியாக ஊர்வலமாக வந்து துர்க்கையம்மனை வழிபட்டனர்.அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. 100 கலைஞர்கள், நாகஸ்வர வாத்தியத்துடன் தாரை தப்பட்டைகள் முழங்க விழா நடந்தது.