உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோயிலில் நாளை குத்துவிளக்கு பூஜை!

அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோயிலில் நாளை குத்துவிளக்கு பூஜை!

செங்கம் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோயிலில் 46-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. குத்து விளக்கு பூஜையில் கலந்துகொள்ளும் பெண்கள் முன்னதாக கோயிலில் உள்ள விழாக் குழுவினர்களிடம் தகவல் தெரிவிக்கவேண்டுமென விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விழாவையொட்டி சுவாமிக்கு அன்று மாலை பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம் ஆகியவை நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னதான நிகழ்ச்சி நடைபெறுமென விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !