மழை மாரியம்மன் கோவில் தேரோட்டம்!
ADDED :4217 days ago
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மழை மாரியம்மன் கோவில், ஆடிப்பெருவிழா நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்தும், மாவிளக்கு வைத்தும் அம்மனை வழிபட்டனர். இரவு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். நேற்று நடந்த தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மஞ்சள் விளையாட்டு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.