பூட்டை கிராமத்தில் கஞ்சி வார்த்தல் !
ADDED :4228 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. பூட்டையில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் மழை வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும் கஞ்சி களைய ஊர்வலம் நடந்தது. செவ்வாடைஅணிந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயத்துடன், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் அம்மனுக்கு கஞ்சி படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.