உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளம் தூர்வாரும் பணியில் நந்தி சிலை, திரிசூலம் கண்டெடுப்பு!

குளம் தூர்வாரும் பணியில் நந்தி சிலை, திரிசூலம் கண்டெடுப்பு!

திண்டுக்கல்:மாநகராட்சியால் தூர்வாரப்படும் திண்டுக்கல் கோட்டை குளத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பழங்கால நந்தி சிலை, பித்தளையால் செய்யப்பட்ட திரிசூலம் ஆகியவை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளம், மாநகராட்சியால் தூர்வாரப்பட்டு வருகிறது.நேற்று மாலை 6 மணிக்கு பணி நடந்த போது திரிசூலம் ஒன்றும், கருங்கல்லால் ஆன நந்தி சிலையும் கண்டெடுக்கப்பட்டது. மேயர் மருதராஜ், கமிஷனர் ராஜன், பொறியாளர் கணேசன் பார்வையிட்டனர்.பித்தளையால் செய்யப்பட்ட திரிசூலம் ஆறு அடி உயரமும், 20 கிலோ எடையுடன் இருந்தது. இரண்டரை அடி நீளம், ஒன்றரையடி உயரம் உள்ள நந்தி சிலை கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் மரியசூசை, பள்ளபட்டி வி.ஏ.ஓ., கண்ணனிடம் இவை ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !