உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கையம்மன் கோவிலில் 3 நாட்கள் சிறப்பு பூஜை!

துர்க்கையம்மன் கோவிலில் 3 நாட்கள் சிறப்பு பூஜை!

திருத்தணி : ஆடி மாதம் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, துர்க்கையம்மன் கோவிலில், மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.திருத்தணி, காந்தி நகரில் அமைந்துள்ள, துர்க்கையம்மன் கோவிலில், நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. நேற்று இரண்டாவது நாளை முன்னிட்டு, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, கூழ் வார்த்தில் நிகழ்ச்சி மற்றும் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !