பள்ளிப்பட்டு அய்யனாருக்கு ஊரணி பொங்கல் வழிபாடு!
ADDED :4093 days ago
ரிஷிவந்தியம்: பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவில் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். ரிஷிவந்தியம் ஒன்றியம் பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொடி ஏற்றுதலுடன் துவங்கியது. தொடர்ந்து இரவு முத்து பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 1ம் தேதி வெள்ளிக்கிழமை பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். மறுநாள் ( 2ம் தேதி) கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை ஊரணி பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று சாகைவார்த்தல் நடந்தது.