பரமக்குடி பெருமாள் கோயில் ஆக.10ல், தேரோட்டம் !
ADDED :4092 days ago
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம், ஆக., 2ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, சுவாமி தினமும் காலை சிம்மாசனத்திலும், மாலை அன்ன, சிம்ம, சேஷ, கருட, அனுமன், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆக.7ல், இரவு 7 மணிக்கு பெருமாள் - ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சியும், ஆக. 9ல், நவநீதகிருஷ்ணன் சேவையும், ஆக.10ல், காலை 10.35 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலை தீர்தவாரியும், இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.