உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்னாடு கோவிலில் ஆடிமாத திருவிழா!

நன்னாடு கோவிலில் ஆடிமாத திருவிழா!

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த நன்னாடு காளியம்மன் கோவிலில் ஆடிமாத சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம்  காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 3 மணிக்கு பால், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து,  மாலை 6 மணிக்கு காளியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதில், அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில்,  ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !