மேலச்சேரி கோவிலில் தீமிதி உற்சவம்!
ADDED :4130 days ago
செஞ்சி: மேலச்சேரி திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. செஞ்சி தாலுகா மேலச்சேரி திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம் கடந்த மாதம் 16ம் தேதி துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரமும் பாரத சொற்பொழிவும் நடந்து வந்தது. 29ம் தேதி திரு க்கல்யாண உற்சவம் நடந்தது. 18ம் நாள் விழாவாக கடந்த 3ம் தேதி துரியோதனன் படுகளமும், தீமிதி விழாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். செவலபுரை, தாதங்குப்பம், தாதிகுளம், ராமகிருஷ்ணாபுரம், சிறுவாடி, மேல்மண்ணுõர், சித்தாத்துõர் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.