நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :4191 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், வரலட்சுமி விரதம் மற்றும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், பிரதோஷம் மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி, 16 வகையான சிறப்பு திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் வரலட்சுமி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுமங்கலி பெண்கள் பங்கேற்ற வரலட்சுமி விரத சுமங்கலி பூஜையும் நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று, லட்சுமி நரசிம்மரையும்; வரலட்சுமி அம்மனையும் தரிசனம் செய்தனர்.