தும்பவனம் மாரியம்மன் 32 கரங்களுடன் வீதியுலா!
ADDED :4081 days ago
காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம், நாகலத்து தெரு தும்பவனம் மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா, வெகு விமர்சையாக நடந்தது. சின்ன காஞ்சிபுரம், நாகலத்து தெருவில் உள்ள சிவகாமி சமேத நடராஜ பெருமான் கோவிலில், தும்பவனம் மாரியம்மன் சன்னிதி உள்ளது. இந்த கோவிலில், ஆடி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை, இத்திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், தும்பவனம் மாரியம்மன், 32 கரங்களுடன், மலர் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. படைக்கப்பட்ட கூழ், அம்மனுக்கு நிவேத்தியமாக படைக்கப்பட்ட பின், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நேற்று இரவு, 7:00 மணியளவில், அம்மன் வீதியுலா நடந்தது.