உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் மஹோத்ஸவம்

ராகவேந்திரர் மஹோத்ஸவம்

தர்மபுரி: விருபாட்சிபுரம் உடுப்பி புத்திக மட கிளையான ராகவேந்திரா கோவிலில், 343ம் ஆண்டு ஆராதனை மஹோத்ஸவ விழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு, 11ம் தேதி முதல், 14ம் தேதி வரை, காலை, 5 மணிக்கு சுப்ரபாதமும், 6 மணிக்கு, வேதபாராயணமும், 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 10 மணிக்கு பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து, 10.30 மணிக்கு கனகபூஜையும், 11.30 மணிக்கு ரதோத்சவமும், 12 மணிக்கு மஹா தீபாராதனையும், 12.30 மணிக்கு அலங்கார பந்தியும், ஒரு மணிக்கு, தீர்த்த பிரசாதமும் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு உற்சவமும், தீபாராதனையும், 6.30 மணிக்கு ஸ்வஸ்தி நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று இரவு, 7 மணிக்கு தேனி ராகவேந்திரர் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், நாளை, பல்லடம் சகோதரிகள் ஜெயலட்சுமி, காயத்ரி குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 13ம் தேதி, பெங்களூரு ஸ்வர்ணாமோகன் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், 14ம் தேதி, 108 சுமங்கலிகள் பங்குபெறும் லட்சுமி சோபான பூஜையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் டிரஸ்டி தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !