புவனகிரி ராகவேந்திரர் சுவாமி கோவிலில் ஆராதனை!
புவனகிரி: புவனகிரி, கடலூர் ராகவேந்திர சுவாமிகள் கோவிலில் ஆராதனை விழா நடந்து வருகிறது. புவனகிரி ராகவேந்திரா மிருத்திங்க பிருந் தாவனத்திற்கு பால் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஆராதனையில், வேத விற்பன்னர் நரசிம்ம ஆச்சார், தலைமையில் ரகோத்தம ஆச்சார், ரமேஷ் ஆச்சார், ராகவேந்திரராவ் ஆகியோர் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். விழாவில் புவனகிரி, கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், வேலூர் பகுதிகளில் இருந்து திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ராகவேந்திரர் சுவாமிகள் உருவப் படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. கடலூர்: கூத்தப் பாக்கம் ராகவேந்திர சுவாமிகள் கோவிலில் 343ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று முன்தினம், துவங்கியது. இதையொட்டி அன்றைய தினம் காலை சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், சிறப்பு அபிஷேகம், ஸ்வஸ்தி, பல மந்த்ராட்சதை நடந்தது. நேற்று காலை பால் மற்றும் பஞ்சாமிர்த அபி ஷேகம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 13ம் தேதி காலை 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, இரவு 8:30 மணிக்கு ஸ்வஸ்தி, பல மந்த்ராட்சதை நடக்கிறது.