தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்!
ADDED :4234 days ago
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடி திருவிழா நேற்று தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது. ஆக., 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக., 8 ல் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஆக., 10 ல் தேரோட்டம் மற்றும் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று காலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு 7 மணியளவில் மலர் அலங்காரத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் தெப்ப உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.