உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சையம்மனுக்கு தீச்சட்டி: எல்லம்மனுக்கு சந்தனக்காப்பு!

பச்சையம்மனுக்கு தீச்சட்டி: எல்லம்மனுக்கு சந்தனக்காப்பு!

ஆர்.கே.பேட்டை: வங்கனுார் அம்மன் கோவில்களில், நேற்று ஆடி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடந்தது. பச்சையம்மனுக்கு தீச்சட்டி ஏந் தியும், எல்லம்மனுக்கு பொங்கல் வைத்து சந்தனக்காப்பு அலங்காரமும், அன்னியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

பாலாபிஷேகம்: வங்கனுாரில், நேற்று முன்தினம் முதல், நேற்று அதிகாலை வரை, அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா சிறப்பாக நடந்தது.  எச்சான கோத்திரத்தாரின் எல்லம்மன், செராத்துாரான் வகையறா அன்னியம்மன் மற்றும் பச்சையம்மன் கோவில்களில் ஆடி பொங்கல், இரவு  பகலாக தொடர்ந்து இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. அன்னியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், காலை, மூலவர் அம்மனுக்கு பாலாபி÷ ஷகம் செய்யப்பட்டது. எல்லம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. கோவில் வளாகத்தில் திரளான பெண்கள்,  காலை முதல், மாலை வரை, பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.

நள்ளிரவில்...: இதே போன்று பச்சையம்மன் கோவிலில், அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு,  பச்சையம்மனுக்கு பக்தர்கள் தீச்சீட்டி ஏந்தி கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். அதை தொடர்ந்து, நேற்று அதிகாலை, உற்சவர் அம்மன்,  வீதியுலா  வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !