ஸ்ரீமுஷ்ணம் மாரியம்மன் கோவில் விளக்கு பூஜை!
ADDED :4154 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த அம்புஜவல்லிப்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி விளக்கு பூஜை நடந்தது. கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து இரவு லவகுசா ராம நாடகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் விளக்கு பூஜை நடந்தது. ஜெய்சங்கர் குருக்கள் விளக்கு பூஜையை நடத்தினார். இரவு சுவாமி வீதியுலா கும்ப பூஜை நடந்தது. ஏற்பாடுகளை அம்புஜவல்லிப்பேட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.