உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகபாடி கோவில் தேர்த் திருவிழா!

தியாகபாடி கோவில் தேர்த் திருவிழா!

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் தியாகபாடி அம்மன் கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்தது. கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி  அணை அருகில் உள்ள தியாகபாடி அம்மன் தேர் திருவிழா நடந்தது. கடந்த 4 ம் தேதி தட்டு சாற்றுதல் நிகழ்ச்சி  துவங்கியது. நேற்று காலை 9.00  மணிக்கு  தேர் திருவிழா துவங்கியது. பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்துச் சென்றனர். கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ராஜக்கண்ணன்  தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !