சித்திவிநாயகர் கோவிலில் மகா சங்கடஹரசதுர்த்தி விழா!
ADDED :4151 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ரங்கநாதர் தெருவிலுள்ள சித்திவிநாயகர் கோவிலில் நேற்று மகா சங்கடஹரசதுர்த்தி நடந்தது. காலை 6:00 மணிக்கு அபி÷ ஷகமும், மாலை 7:00 மணிக்கு உற்சவருக்கு அலங்காரம் நடந்தது. சுவாமி மூஷிகவாகனத்தில் கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகர் சக்தி விநாயகர் கோவிலில் காலை 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு அரிசிமாவு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பலவித திரவியங்களால் சி றப்பு அபிஷேகம், மகா அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை, லட்சார்ச்சனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய் திருந்தனர்.