உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூர் விஷ்ணு கோவிலில் ஆடி விளக்கு பூஜை!

கூடலூர் விஷ்ணு கோவிலில் ஆடி விளக்கு பூஜை!

கூடலூர் : கூடலூர் புத்தூர்வயல் விஷ்ணு கோவிலில், ஆடி விளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. கூடலூர் புத்தூர் வயல் விஷ்ணு கோவிலில் ஆண்டு தோரும் ஆடி மாதம் செவ்வாய் கிழமையில் "ஆடி விளக்கு பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பூஜை கடந்த மூன்று செவ்வாய் கிழமைகளில் நடந்தன. இதில், கலந்து கொண்ட பக்தர்கர்கள், கோவில் வளாகத்தில் வரிசையாக வாழை இலையில் பச்சை அரிசி பரப்பி அதன் மீது வைக்கப்பட்ட தேங்காய்களை உடைத்து, பூக்கள் மற்றும் தண்ணீரை தெளித்தார். தொடர்ந்து, பகவதி அம்மன் முன் வைக்கப்பட்ட மஞ்சள், குறுமிளகு தூளுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பூஜை செய்யப்பட்ட தேங்காயின் ஒரு பகுதி மூடியில், பூஜை செய்யப்பட்ட மஞ்சள், குறுமிளகு தூளை வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !