உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவித்ர உத்ஸவம் திரளாக பக்தர்கள் தரிசனம்

பவித்ர உத்ஸவம் திரளாக பக்தர்கள் தரிசனம்

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பவித்ர உத்ஸவத்தில், நேற்று தீர்த்தவாரி சேவையில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பவித்ர உத்ஸவம் ஆக.,11ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில், நேற்று காலை, உதய கருட சேவையில் பெருமாள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, பவித்ர விஸர்ஜனம், பெருமாள் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் ஆகியன நடந்தது. மதியம் தீர்த்த வாரியும், கும்பப்ரோஷணம், திருவாராதனம், திருப்பாவாடை, சாற்றுமுறை, கோஷ்டி செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பவித்ர உத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை மாருதி சேவா சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !